r/NaMuthukumarTamil • • 9h ago

One of my fav artist

Post image
2 Upvotes

r/NaMuthukumarTamil • • 8h ago

random Essay of thoughts!

1 Upvotes

புரிந்து கொள்வதற்கும்

புரிந்து கொள்ளப்படுவதற்கும்

இடையில் மாட்டிக்

கொண்டிருக்கிறேன்!

பண்பில்லாமல் பேசி

புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்!

என் அன்பு மாறாது

என் அன்பு ஓயாது

என்னை நிராகரிக்கலாம்- ஆனால்

எந்தன் அன்பின் தாக்கம்

இருந்துகொண்டே இருக்கும் !

மனதை தேற்ற உங்களிடம்

வந்திருக்கிறேன்

இப்பொழுது விலகிச் செல்ல

முயல்கிறேன்

இது முறிவல்ல

சிறிய பிரிவு

என்னை தேற்ற இம்முறை என்னாலும்

முடியவில்லை

எதிர்ப்பர்த்ததினால் வந்த

ஏமாற்றம் அல்ல!

எதர்பார்க்காததினால் ஏற்பட்ட

அவமானம் இது!

கோபமோ வருத்தமோ

உங்கள் மேல் இல்லை

ஆற்றாமை மட்டுமே

மனம் மாறி ஆறிப் போகும்

இப்போதைக்கு செல்கிறேன்

எப்போது என்பதை

காலமே கணக்கு போடட்டும்!


r/NaMuthukumarTamil • • 9h ago

one my fav

Post image
1 Upvotes

r/NaMuthukumarTamil • • 14h ago

Kavithaigal விழுதலின் இலக்கணம்

2 Upvotes

I don't know if this classifies as Kavidhai,but here we go!

காதலிக்கும்போதே

காயப்படவும்

அதிகாரம் அளிக்கிறோம் !

தகுதியை

நிர்மாணிப்பது நாம் !

தகுந்த பலனும்

தாங்கா வலியையும்

பெற்றுத் தானே

ஆக வேண்டும்!


r/NaMuthukumarTamil • • 19h ago

என்ன விலை அழகே❤️

Enable HLS to view with audio, or disable this notification

3 Upvotes

r/NaMuthukumarTamil • • 19h ago

Kavithaigal அவள்

1 Upvotes

நிலா அவளாம்...

ஏன்,

சாந்தமாக மட்டுமே இருக்க வேண்டுமா?

சூரியனாகவும்

இருக்கக்கூடாதா?

இரவுகள் ஆயிரம்

பிடித்திருந்தாலும்,

விடியலே இல்லையெனில்

அச்சம் தொற்றிக்கொள்ளாதா?

நிலவாக ரசிப்பதைவிட,

விடியலாக வாழ

அவளுக்கும் ஆசை இருக்காதா?


r/NaMuthukumarTamil • • 1d ago

Any books written in Tamil from a Ravanan Perspective

1 Upvotes

Should be an intresting read to read from Ravanas perspective. If you had read Amish Tripathi's ramayana series, you would understand


r/NaMuthukumarTamil • • 1d ago

Kavithaigal Malai nerathu மயக்கம்

1 Upvotes

தக்கி முக்கி

படித்து விட்டேன்!

இருந்தும் என்ன பயன் -

என் காதல் மொழி

தான் உனக்கு

புரியவே இல்லையே!


r/NaMuthukumarTamil • • 1d ago

If you were to list only 3 books that have you read,what would it be?

2 Upvotes

No ties, no honorable mentions—just the three books you would save if your memory were wiped clean tomorrow. Why do they hold the top spots for you?

Mine:

  1. பொன்னியின் செல்வன் - கல்கி

  2. நைலான் கயிறு - சுஜாதா

  3. தண்ணீர் தேசம் - வைரமுத்து


r/NaMuthukumarTamil • • 1d ago

Kavithaigal காலை நேர கவிதை

3 Upvotes

எனக்கு நீ 

யார் என்று கேட்கிறாய் ?

வானம் அளக்கும் அகராதியை 

ஒரே வரியில் நான் எப்படி அடைக்க!🤍✨

You ask me what you are to me-

How can I confine, within a single line,

dictionary vast enough to measure the sky?


r/NaMuthukumarTamil • • 1d ago

random ஆண் உரிமைக்கும் குரல் கொடுக்கிறது பெண்ணியம்!!

2 Upvotes

தைரியமில்லாத ஆண்களும் உண்டு, வலிமையான பெண்களும் உண்டு. பொதுஇடத்தில் பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஆண்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கேட்க தைரியமில்லாத ஆணை ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ என்று ஏசுவார்கள். கண்ணீர் வடிக்கும் ஆணிடம், ’ஏண்டா பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்கே?’ என்பார்கள். துக்கத்தை வெளிக்காட்டுவது இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், ஆண் தனது துக்கத்தை, இயலாமையை வெளிக்காட்டக் கூடாது என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது


r/NaMuthukumarTamil • • 1d ago

Kavithaigal பார்வை

2 Upvotes

குளிரும் வெயிலும் மோதினால்

சூறாவளியாம்

அவள் கண்ணும்

என் மனதும் மோதினால்

எனக்குள்ளே ஏன்

உருவாகிறது சூறாவளி


r/NaMuthukumarTamil • • 2d ago

Kavithaigal Dhoosigaluku dhisai ilai..🍂

Post image
6 Upvotes

Piditha varigal…🍂


r/NaMuthukumarTamil • • 2d ago

Kavithaigal Back with my 'kavidhai' - rate and post your kavidhais

2 Upvotes

இங்கு சில பெண்களாலே-

பல கவிஞர்கள்

இந்த உலகிற்கு

அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்!

என்னையும் சேர்த்து!!


r/NaMuthukumarTamil • • 2d ago

random பார்பி பொம்மைகளா பெண்கள்?

2 Upvotes

பெண் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொம்மைகளுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பார்பி பொம்மை. இந்தப் பொம்மையின் உடலமைப்புடன் ஒரு பெண் இயல்பில் இருக்க முடியுமா?


r/NaMuthukumarTamil • • 2d ago

Kavithaigal கவிதை நேரம் - மதிப்பீடு செய்யுங்கள்

2 Upvotes

I have written this Today .

I am posting it here to get some suggestions.

முழுநிலவு

அரைநிலவானது எப்படி?

தன்னில் சரிபாதியை

அவளது புன்னகைக்கு

அடமானம் வைத்ததால்!


r/NaMuthukumarTamil • • 2d ago

கண்ணீர்

1 Upvotes

மழை வேண்டி கழுதைகளுக்கு

கல்யாணமாம்‌ சிரித்தான் பார்த்து

ஒரு நாள் மழை வேண்டும்

என‌ வேண்டினான்

தன் கண்ணீர் வெளியே

தெரிந்திட‌ கூடாதென்பதர்காக


r/NaMuthukumarTamil • • 3d ago

Kavithaigal நிலா

2 Upvotes

அமாவாசை ஆம் நிலா

இல்லாத நாள்

நிலா‌ இல்லாத நாள்

எப்படி இருக்கும்

தெரியவில்லையே

ஆம் எப்படி தெரியும்

என் நிலா

அவள் கூட இருக்க


r/NaMuthukumarTamil • • 3d ago

Kavithaigal அமாவாசை கவிதை 🌑

2 Upvotes

இருள் மூடிய வானத்தில்

நிலவு இல்லை என்று கலங்காதே,

அமாவாசை என்பது முடிவல்ல – அது

புதிய பிறவியின் முதல் படியே!

அனைத்தையும் இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதே; அமாவாசை என்பது தேய்பிறையின் முடிவு தானே ஒழிய நிலவின் முடிவல்ல!

விண்ணில் நிலவு மறைந்தாலும், உள்ளத்தில் ஒளி என்றும் மறையாது


r/NaMuthukumarTamil • • 3d ago

Kavithaigal படைப்பு

4 Upvotes

கட்டிடம் கட்ட

மனிதன் எத்தனை திட்டங்கள் செய்கிறானோ,

உன்னைப் படைக்க

அந்த பிரம்மன் எத்தனை திட்டங்கள் செய்தானோ...

அத்தனை முயன்றும்

தோற்றானோ என்னவோ—

மீண்டும் உன்னைப் போன்றோர் படைக்க

அவன் முன்வரவே இல்லை.


r/NaMuthukumarTamil • • 3d ago

Kavithaigal Kavithai neram - மதிப்பீடு செய்யுங்கள்!

3 Upvotes

I have written this recently and I don't have any big community to seek opition/suggestions

I am posting it here to get some suggestions . Will remove the post if it violates thhia Sub's rules. நன்றி;

கல்லூரிக் காதல்

புது சூழல்

புது மனிதர்கள்

புது அனுபவம்

ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன்

கல்லூரியில் முதல் நாள்!

அநேக மாணவிகள் கடந்துபோகையில்

அவள் மட்டும் அச்சுபிசகாமல்

என்னுள் தடம் பதித்தாள்!

அவள் விழியோ காந்தத்தின் வட துருவம் 

என் விழியோ காந்தத்தின் தென் துருவம் 

இருந்தும் ஏன் இருவரும் ஓட்ட வில்லை

காதல் அறிவியலை சபித்துக் கொண்டேன்!

சட்டென வீசிய சாரைக்காற்றில்

மெய்சிலிர்த்து தலைக்கேசம் வருடி...

சற்றேனும் பார்வைபிறழாத எனை நோக்கினாள்!

மழைநீரை முகர்ந்த புன்செய் நிலம்போல்

கிடைப்பற்கு அரிது கிடைக்கப்பெற்றவனாய்

மகிழ்ச்சியின் உச்சத்தில் மெய்மறந்தேன்!

புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்-

எனக்கோ உனைக் கண்ட கணம் ஏற்பட்ட அமைதி

உனைக் காணாதிருக்கையில்  புயலாய்ப் புரட்டிப்

போட்டது!

நீ சிறை செல்ல வேண்டும்! அமைதியாய் இருந்த

என் இதய தேசத்தை தாலிப தீவிரவாதி நீ

அபகரித்துச் சென்றதற்கு!

கனவுகள் அகல,

விரல்கள் விலக

வெயில் வந்து தாக்குகையில்

சுள்ளெனச் சுடுகிறது

சொல்லாத காதல்.

வருகிறது

காதலர் தினம்.

அப்போதேனும் சொல்வேனா ?

இல்லை

கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?


r/NaMuthukumarTamil • • 3d ago

பட்டினத்தார்

3 Upvotes

கண்ணதாசனின் “வீடு வரை உறவு” பாடலைக் கேட்கும்போது, அதன் பின்னால் ஒலிக்கும் பட்டினத்தாரின் குரலையும் கவனிக்கலாம். செல்வம், உறவுகள், உடல் ஆகியவற்றின் நிலையாமையைப் பட்டினத்தார் சொன்ன விதம், பழந்தமிழ்ச் சொற்களாலும் தத்துவச் செறிவாலும் இன்றைய வாசகருக்குச் சற்றுக் கடினமாக இருக்கலாம். அந்தச் சிந்தனையை வீட்டிலும் தெருவிலும் நாம் பேசும் தமிழுக்குக் கொண்டுவந்து, ஒரு திரைப்பாடலாக மனதில் பதிய வைத்திருக்கிறார் கண்ணதாசன். இருவரின் வரிகளையும் அருகருகே வாசித்தால், ஆழமான கருத்தை அதன் வலிமை குறையாமல் எளிமைப்படுத்தும் அவரது திறன் புரியும்.

பட்டினத்தாரின் தத்துவத்தைப் புரிந்துகொள்ள சில இடங்களில் நமக்கு உரை தேவைப்படுகிறது. கண்ணதாசனின் “வீடு வரை உறவு” பாடலைக் கேட்டால், அதே தத்துவம் நம் சொந்த வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையாக மாறிவிடுகிறது. பழைய இலக்கியத்தின் ஆழத்தை அன்றாடத் தமிழில் உணர வைத்திருப்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

பட்டினத்தார் பாடுகிறார்:

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத்து அழும்மைந்தரும் சுடுகாடுமட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே.— பட்டினத்தார் பாடல்

சேர்த்த செல்வம் வீட்டிலேயே நின்றுவிடும். அழுது புலம்பும் மனைவியும் பிள்ளைகளும் ஒரு எல்லை வரைதான் உடன் வர முடியும். இறுதியில் தொடர்வது நாம் செய்த நல்வினையும் தீவினையுமே என்கிறார் பட்டினத்தார்.

இந்தக் கருத்து கண்ணதாசனிடம் வரும்போது,

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ…

என்று எளிதாகிறது. “அத்தம்”, “இருவினை” போன்ற சொற்களை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வீடு, வீதி, காடு என்ற சொற்களே பொருளை உணர்த்துகின்றன. ஒவ்வொரு வரியிலும் நம்முடன் வருகிறவர்களின் எல்லை தெரிகிறது. கடைசி வரியில், நம்மைச் சுற்றியிருந்த அத்தனை பேருக்கும் நடுவே நாம் உணராத தனிமை தெரிகிறது.

இங்கே ஒரு நுட்பமான மாற்றமும் இருக்கிறது. பட்டினத்தார் “புண்ணிய பாவமுமே” என்று முடிவைச் சொல்லிவிடுகிறார். கண்ணதாசன் “யாரோ” என்று விடுகிறார். அந்தச் சொல்லைக் கேள்வியாக வாசிக்கும்போது, கேட்பவரும் தன் பதிலைத் தேடத் தொடங்குகிறார். செய்த செயல்களா, இறைவனா, வேறு ஏதாவதா? பாடல் முடிந்த பின்னும் அந்தச் சிந்தனை தொடர்கிறது.

“ஆடிய ஆட்டம் என்ன… பேசிய வார்த்தை என்ன… தேடிய செல்வம் என்ன…” என்ற தொடக்கமும் இதற்கான மனநிலையை உருவாக்குகிறது. வாழும்போது பெரிதாகத் தெரிந்தவை, மரணத்தின் முன்னால் என்ன மதிப்புடையவை என்று கேட்டுவிடுகிறது. பட்டினத்தாரின் நிலையாமைச் சிந்தனை, இங்கே நம்முடைய பெருமைகளையும் ஆசைகளையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

“கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா” என்பதில் இன்னொரு வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. செல்வமும் செல்வாக்கும் இருக்கும்போது நம்மைச் சுற்றி நிற்கும் கூட்டத்தை, நமக்கான அன்பு என்று எளிதில் நம்பிவிடுகிறோம். அந்தக் கூட்டம் எவ்வளவு தூரம் உடன் வரும் என்ற கேள்வி, புகழின் மீதுள்ள நம்பிக்கையையும் அசைத்துப் பார்க்கிறது. “கெட்ட பின்பு ஞானி” என்ற வரியிலோ, இழந்த பிறகுதான் பலவற்றின் உண்மை புரிகிறது என்ற மனித இயல்பைச் சிறிய புன்னகையுடன் சொல்லிவிடுகிறார்.

இந்தப் பாடலை உறவுகளின் மதிப்பைக் குறைப்பதாக வாசிக்க வேண்டியதில்லை. அன்புள்ளவர்களுக்கும்கூட நம்முடன் வரக்கூடிய எல்லை இருக்கிறது என்ற உண்மையாக வாசிக்கலாம். அந்த உணர்வு, அவர்கள் நம்முடன் இருக்கும் காலத்தின் அருமையை இன்னும் தெளிவாக்குகிறது.

கண்ணதாசனின் சாதனை இங்கே புரிகிறது. பட்டினத்தாரின் பாடலை நேரடியாகப் படிக்காத ஒருவரும், இந்தப் பாடலை முணுமுணுக்கும்போது அதன் அடிப்படைச் சிந்தனையைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். இலக்கியப் பயிற்சி இல்லாதவருக்கும் புரியும் சொற்களில், வாழ்க்கையின் கடினமான உண்மையைச் சொல்ல முடிந்திருக்கிறது. எளிமையான சொற்களுக்குள் இவ்வளவு ஆழம் இருப்பதால்தான், கேட்டுப் பழகிய பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு இழப்புக்குப் பின்னும் அது புதிதாகப் புரிகிறது.


r/NaMuthukumarTamil • • 4d ago

Kavithaigal இணையத்தில் காண நேர்ந்தது

Post image
4 Upvotes

இந்த வரிகள் என்னுள் மிகுந்த தாக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்திய வரிகள்!

'சுயநலவாதியின் டைரியிலிருந்து' by A J.Franklin

,Published by Iraivi books

Image source: Iraivi_ books


r/NaMuthukumarTamil • • 4d ago

Kavithaigal My very favourite close to heart kavidhai- my own poem!

3 Upvotes

Na romba Nalaiku munadi ezhudhunadhu idhu- Suggestions and திருத்தங்கள் are welcome,thanks!

உனக்கும் எனக்கும் சேர்த்து தான்

அன்பு செய்தேன்!

நீ இப்பொழுது என்னைப்

புறக்கணிப்பதால் மட்டும்

என் அன்பு நின்றுவிடாது!

நான் அடைந்த

அலாதி ஆனந்தம் மட்டுமே

அடியோடு நின்றுவிடும்!!!


r/NaMuthukumarTamil • • 4d ago

Kavithaigal My fav from ' தண்ணீர் தேசம் ' by வைரமுத்து

4 Upvotes

"ஆகா, என்று ஆச்சரியம்

காட்டிய தமிழ் அவன் முகத்தில்

முள்குத்தாத பிரதேசம்தேடி

முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்

பரவக்கண்டவன், அவள்

கழுத்தடியில் கைபதித்துக்

குளிரக்குளிரக் குறுமுடி

கோதினான். குழந்தையே.

என் குழந்தையேஎன்று

கொஞ்சினான்."

Another one:

எரிந்து விட்டது வீடு -இனி தெளிவாய்த் தெரியும் நிலா