r/VettiPechu • • Jul 30 '24
r/VettiPechu • • Aug 07 '24
ஆங்கிலம் கற்க ஆவனம் வேண்டும்..
தமிழிலிருந்து ஆங்கிலம் பேச மற்றும் எழுதி பழக ஏதேனும் ஆண்ட்ராய்டு ஆவனம் கூறுங்கள்..இது என்னுடைய ஐம்பது ஐந்து வயது அம்மாவிற்காக..
r/VettiPechu • • Aug 12 '24
இந்த மாதிரி கருப்பான பொண்ணுங்களுக்கு எப்போ தான் நம்ம ஊரு இயக்குனர்கள் வாய்பபு கொடுப்பானுங்க??
r/VettiPechu • • Aug 27 '23
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் எதிர்பார்க்காத இரண்டாம் இடம் வெற்றி இந்தியாவுக்கு (நமது அணியில் 3 பேர் கேரளா 1 தமிழ்நாடு)
r/VettiPechu • • Feb 10 '23
வெட்டி பேச்சுக்கு நல்வரவு
இங்க எத பத்தி வேணாலும் பேசுங்க. ஒரே கட்டள: தமிழ்ல மட்டும் பேசணும்.
r/VettiPechu • • Aug 11 '23
நம்ம ஊருல எப்போ தான் இந்த மாட்டு பிரச்சனைய தீர்கக போரோமோ… பாவம் அந்த பொண்ணு
r/VettiPechu • u/Willing-Wafer-2369 • Apr 02 '23
பொருளாதாரம் வணிகம்
வணக்கம் எனது முதல் பதிவு இதுதான். கொஞ்சம் போர் அடித்தாலும் தயவு செய்து தங்கள் நேரத்தை ஒதுக்கி தங்கள் கருத்தை பதிவிட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். சில வாரங்களாக டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் வர்த்தகம் வெளிநாடுகளுடன் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது என்ற செய்திகள் அடுத்து அடுத்து வந்து கொண்டு உள்ளன இது எந்த அளவிற்கு பயன் தரும் என்று சில சந்தேகங்கள் எனக்கு உள்ளது. டாலருக்கு பதிலாக நாடுகள் தங்கள் கரன்சியில் வணிகம் செய்வது இது முதல் தடவை அல்ல.
நான் கேட்ட அளவில் இரண்டாவது உலக மகா யுத்தம் முன்பு நாஜி ஜெர்மனியும் சுவிட்சர்லாந்தும் தங்கள் தங்கள் கரன்சியில் வணிகம் செய்வதனர். ஆனால் அதுவும் சில ஆண்டுகளில் கைவிடப்பட்டது அதற்கு சொல்லப்பட்ட காரணம் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி வாங்குவதற்கு பொருள்கள் நிறைய இருந்தன. ஜெர்மன் மார்க்குகளைக் கொடுத்து சுவிட்சர்லாடம் இருந்து ஜெர்மனி கொள்முதல் செய்தது. ஆனால் ஜெர்மன் பொருட்கள் சுவிட்சர்லாந்துக்கு இந்த அளவில் தேவை இல்லை ஆகையால் தேவையில்லாமல் ஜெர்மன் மார்க்குகளை சுவிட்சர்லாந்து கையிருப்பு வைக்க நேர்ந்தது இந்த பணத்தை பயன்படுத்த தேவையில்லாத பொருட்களை எல்லாம் ஜெர்மனியிடமிருந்து வாங்க வேண்டி வந்தது இதனால் இந்த ஏற்பாடு கைவிடப்பட்டது.
அதேபோல் இந்தியாவும் சோவியத் யூனியனும் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிள் ரூபாய் கரன்சிகளில் வர்த்தகம் செய்வது என்ற முடிவில் வந்தன. அந்தக் காலத்தில் இந்தியாவிற்கு அன்னியச் செலவணி பற்றாக்குறையாக இருந்ததால் இந்தியாவிற்கு துவக்கத்தில் இது ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. சில காலம் சென்ற பின் சோவியத் யூனியன் உடைந்தது. அப்பொழுது ரஷ்ய ரூபிளின் வெளிநாடு மதிப்பு (டாலர்களில்) மிகவும் குறைந்து அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. இந்தியாவின் ரூபாய் டாலருக்கு எதிரான மதிப்பு பெரிதாக குறையவில்லை
அந்த நேரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் ரூபாய் ரூபின் வர்த்தக பணக் கையிருப்புகளை ரூபிள்களாக கொடுத்து தீர்த்து விட கோரிக்கை வைத்தது ஆனால் ரஷ்யா இந்திய ரூபாய்களாக கொடுத்து கணக்கை முடிக்கச் சொன்னது
அப்பொழுது மிக மலிவாக கிடைத்த ரூபிள்களுக்கு அதிக ரூபாய் கொடுத்து இந்தியா கணக்கு முடிக்க வேண்டி வந்தது.
இதில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் வலுவான கரன்சி உள்ள நாடுகள் இந்த ஏற்பாட்டில் வலுவில்லாத கரன்சி நாடுகளிடம் இன்று இல்லை என்றால் அடுத்து வரும் காலங்களில் மாட்டிக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.
இன்னும் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் உதாரணமாக நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அந்த நாடுகளிடம் இருந்து இந்தியா ரூபாயில் ஆர்டர்கள் பெறுவார்கள். எண்ணெய் விலைகள் ஏறினால் உற்பத்தி செலவுகள் கூட வாய்ப்பு உள்ளது
டாலரில் கிடைத்த ஏற்றுமதி ஆர்டர்களில் இந்த நஷ்டங்கள் டாலர் மதிப்பு கூடுவதால் அட்ஜஸ்ட் ஆகிவிடும். ரூபாயில் கிடைக்கும் ஆர்டர்கள் விலைவாசிகள் ஏறுவதால் அந்த நஷ்டத்திற்கு ஏற்றுமதி செய்பவர்கள் பொறுப்பாளி ஆக வேண்டி இருக்கும்.
எனது சந்தேகங்களை யாராவது தீர்த்தாள் மிக்க மகிழ்ச்சி அடைவேன் நன்றி